இந்தியாவின கனவு தகர்ந்தது – ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
Monday, November 8th, 2021
டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்தில் 28 ரன்களும், டேரில் மிட்செல் 17 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் (40 ரன்- நாட் அவுட்) கீப்பர் தேவன் கான்வாய் (36 ரன் -நாட் அவுட்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர். 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106