தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை ஐவர் உயிரிழப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Friday, November 5th, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியது.

இந்நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் அயிரத்து 136 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 364 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...
யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு - தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முக...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு - பல்கலைக்கழக மானி...