அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்குக்கு – உள்ளூரில் 60 க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன என அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!
Tuesday, November 2nd, 2021
கடந்த காலங்களில் இந்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண்டார்கள் என்றும் பாண் சாப்பிடுவதற்குப் பதிலாக, மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது புற்று நோய்க்கும் சிறந்தது என்றும் பச்சைப்பயறு மோசமானதல்ல என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகை இடம்பெற்ற பூஜையின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நானும் ஒரு விவசாயி தான். இயற்கை உரத்தில் பயிரிட்டுள்ளேன். புதியவர்கள் இதைத் தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக அமையும் என்றும் முதல் பருவத்தில் ஓர் அனுபவமாக இருக்கும் என்றும் அறுவடை குறைவாக இருந்தால், கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பயப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை யாரும் விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது. மக்களுக்குத் தரமான நச்சுத்தன்மையற்ற உணவை வழங்க வேண்டும். கடந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கூடாது என்று கூக்குரல் எழுப்பப்பட்டது.
இப்போது இரசாயன உரம் பெற வேண்டும் என்கிறார்கள். இதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நம் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு நன்றாக விளைகிறது.
உள்ளூரில் 60 க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன. பச்சை பயறு , கௌபி போன்ற பயிர்கள் பல உள்ளன. இவற்றைச் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106