சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி – ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் வாகன ஆலையில் முதலீடு.!

Monday, November 1st, 2021

சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் துணைத் தலைவர் வூ யி, இலங்கையில் வாகனத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தூதுவர் பாலித்த கொஹொனவை தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது எம்.ஜி, செர்ரி மற்றும் ப்ரொடொன் ரகங்களை இலங்கையில் உற்பத்தி செய்து விளம்பரப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனமானது, சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏனைய ஒத்த தயாரிப்புக்களை விநியோகிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்ததொரு நிறுவனமாகும்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், இலங்கையின் மைக்ரோ கார்களுடன் ஏற்கனவே பயனுள்ள உறவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் மைக்ரோ கார்களுடன் விரிவாக்கப்பட்ட கூட்டு முயற்சியை ஆலோசித்து வருவதாக வூ யி தெரிவித்தார்.

வாகனத் துறையிலான முதலீடுகளை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாக தூதுவர் கொஹொன தெரிவித்தார். ஒரு விரிவான திட்டத்தை முன்வைப்பதற்காக சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை ஊக்குவித்தார். வாகனங்களுக்கான உள்நாட்டுச் சந்தை, மற்றும் உலகின் செழிப்பான பிராந்தியத்தில் இலங்கையின் இருப்பிடத்தின் அடிப்படையில் நிலவும் பரந்த சந்தையை தூதுவர் விளக்கினார். மேலும், தூதரகத்தின் முழுமையான ஆதரவையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106