தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரானார் வடக்கின் மன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் – ஜனாதிபதியின் பரிந்துரைக்கு நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம்!
Wednesday, October 27th, 2021
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.
அத்துடன் சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். இது தொடர்பான பரிந்துரைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106