இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!
Monday, October 25th, 2021
இலங்கைக்கு மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த தடுப்பூசி தொகுதி தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்க எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் கூட்டுப் பேரணி!
சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியிலீடுபட்ட 28 நிலையங்களுக்கு எதிராக வழக்கு!
தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுத...
|
|
|


