தனிமையில் வசித்த பெண்ணொருவரை தாக்கி நகைகள் கொள்ளை – வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணை!

Wednesday, September 28th, 2022

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும், பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிசாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர்,  வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் க...
உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...
நாடு முழுமையாக இன்னும் மீளவில்லை - முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென ...

சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி - வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒத...
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...