ஃபிஃபா முன்னாள் தலைவர் காலமானார்!
Wednesday, August 17th, 2016
உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் ஜோவா ஆவ்வலாஞ்சி தனது நூறாவது வயதில் காலமானார்.
கால்பந்து விளையாட்டை பல பில்லியன் டாலர் மதிப்பு சர்வதேச நிறுவனமாக்கிய பெருமை மற்றும் உலக கால்பந்து போட்டியை 16 லிருந்து 32 அணிகள் பங்கேற்க வைத்த பெருமை இவரையே சேரும். ஆனால் இவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து ஃபிஃபாவிலிருந்து ராஜிநாமா செய்தார். முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரரான இவர், ஒலிம்பிக் போட்டிகளை ரியோவில் நடத்துவதற்கான முயற்சிகளில் ரியோவுக்கு ஆதரவாக திறம்பட பணியாற்றினார். தற்போதைய ஒலிம்பிக் மைதானம் இவர் பெயரைக் கொண்டுள்ளது
Related posts:
டோனி - கோஹ்லி இணைந்து பணியாற்றுவது சிறப்பானது – ரஹானே
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய...
2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
|
|
|


