மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அறிவிப்பு!
Friday, October 22nd, 2021
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்!
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
|
|
|


