மலையக திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 19th, 2021

மலையக பகுதி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் முரண்பாடுகளை இரத்து செய்து சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1997 ஆம் ஆண்டு திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை என்ற நிபந்தனை காணப்படுகின்றது.

பதிவாளர் நாயகத்திற்கு எதிரான குணரத்தினம் வழக்கின் தீர்ப்பின்படி, 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்புக்கமைவாக அத்தகைய திருமணத்திற்கு பெற்றோரின் அனுமதி அல்லது ஒப்புதல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது.

அந்த தீர்ப்பின் படி, தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் 18 வயதுக்குக் குறைவானவர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை இரத்து செய்யப்பட வேண்டும்.

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106