நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Saturday, October 9th, 2021

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளைமுதல் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெ...
பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முட...
முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்திய 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் இடை நிறுத்தம் !