பிரதேச சபை வாகன சாரதிகளுக்கு பராமரிப்பு பற்றி பயிற்சி நெறி!
Wednesday, June 20th, 2018
வலி மேற்கு மற்றும் வலி தென் மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கான வீதி ஒழுங்கு மற்றும் வாகனங்களுக்கான பராமரிப்பு குறித்த பயிற்சி நெறி எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கும் வலி தென்மேற்கு சபையிலுள்ள சாரதிகளுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு சபையிலும் வாகனப்பராமரிப்புடன் உள்ள சாரதிகள் 50 அலுவலர்களுக்கு 4 மணித்தியாலங்கள் கொண்ட விசேட பயிற்சிகள் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் வ.பத்மநாதன், வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள இயந்திர பொறியியலாளர் ம.ரவீந்திரன் குரூஸ் ஆகியோரால் வழங்கப்படவுள்ளது.
Related posts:
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர்...
அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு - கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!
|
|
|


