மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை – தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
Thursday, September 30th, 2021
தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற விசேட செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை நடத்திச்செல்வது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட தொகுதிகளில் முன்கூட்டியே வாக்களிக்கின்றமைக்கு சந்தர்ப்பமளித்தல் மற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகளை நிறுவுதல் ஆகியன தொடர்பிலும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
தற்போது 09 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து 03 வருடங்கள் கடந்துள்ளதுடன், அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக பரிந்துரையை வழங்குமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற விசேட செயற்குழு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106