உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!
Wednesday, September 29th, 2021
அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது, சர்வதேசத்திடம் முறையிடுவது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்பிற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற செழுமைமிக்க 100 நகரங்கள் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களிலே எமது மட்டக்களப்பு நகரத்தை ரசிக்க முடியாத சூழல் இருந்தது. இன்று மெல்ல மெல்ல அழகிய நகரமாக மாறி வருகின்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டைப் பொறுப்பேற்றதில் இருந்து கொரொனா நிலைமை. நாடாளுமன்றம் தொடங்கி ஒருவருட காலம் முடிந்தும் கொரோனா நிலைமை முடிந்தபாடில்லை. தற்போது கூட தனிமைப்படுத்தல் சட்டத்தில் நாட்டை முடக்கியிருக்கின்ற சூழலிலேயே இருக்கின்றோம்.
நாட்டில் கொவிட் நிலைமையால் பொருளாதாரப் பிரச்சினை, மக்களுக்குப் பஞ்சம். இந்த நிலையில் இதனை ஏன் ஆரம்பிக்கின்றார்கள் என்ற விமர்சனமும் வரலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எங்களுக்கிருக்கின்றது. கொவிட் தடையாக இல்லாவிட்டால் அடுத்த ஆண்டிலே பலவிதமான மாற்றங்களை இந்த மாவட்டத்திலே செய்து முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இருந்தாலும் எம்மை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். செழுமையான 100 நகரங்கள் திட்டத்திலே மட்டக்களப்பில் இரண்டு நகரங்களும், சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் பல அபிவிருத்தித் திட்ங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கொவிட் சூழலில் அரசாங்கம் மக்களுக்கான முதலீடுகளைச் செய்வதென்பது பெரியவிடயமாகும்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்து பெரிதாகப் பேசப்படுகின்றது. உண்மையில் நானும் சிறைச்சாலையில் இருந்தவன் என்ற அடிப்படையில் அவர்களின் உள்ளக் குழுறலை அறிவேன்.
அதற்கான விசாரணை நடக்கின்றது. அமைச்சர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நிச்சயமாக அந்த விசாரணை சரியாக இடம்பெறும். ஆகையால் அந்த ஒரு விடயத்தை வைத்து இந்த நாட்டில் சிந்தனை ரீதியில் குழப்பம் விளைவிக்க எண்ணுபவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதும், சர்வதேசத்திடம் முறையிடுவதுமாக இருக்கின்றார்கள். அது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்பிற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அதனை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106