கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, September 26th, 2021

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரத்து 406 பேர் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 27 ஆயிரத்து 326 பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அந்த மாதத்தில், 26 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் மற்றும் 57 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த ஒகஸ்ட் மாதத்தில், 28 ஆயிரத்து 903 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 44 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுகள் மற்றும் 50 புதிய இராஜதந்திர கடவுச்சீட்டுகள் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் ஒகஸ்ட் மாதம்வரை, குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தால் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 820 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 625 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுகளும் மற்றும் 220 இராஜதந்திர கடவுச்சீட்டுகளும் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அனைத்து நாடுகளுக்காகவும் 2 இலட்சத்து 4081 கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106