வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!
Saturday, September 25th, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதனடிப்படையில் செப்டெம்பர் மாதத்தின் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றையதினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 719 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106