தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி – வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சைக் குழு!
Wednesday, September 22nd, 2021
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி சுயேட்சைக்குழு வசம் சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தொிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக பதவி வகித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து, தவிசாளர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு, இன்றையதினம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில், இன்று நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகர சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏழு உறுப்பினர்களில் அறுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரு உறுப்பினர்களும் வேட்பாளர் சதீஸிற்கு ஆதரவாகவும்
சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் மற்றும் ஈபிடிபி 2 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் ஒவ்வொரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு வேட்பாளர் செல்வேந்திராவிற்கு ஆதராவாக வாக்களித்தனர்.
கூட்டமைப்பின் துணை தவிசாளரும் சுயேட்சை குழுவிற்கு வாக்களிக்க வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சிப் பொறுப்பையும் கூட்டமைப்பு இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106