கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்தி – ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 20 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Monday, September 20th, 2021

கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது

நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற காணொளி மூல கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், ஜீவனோபாயம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மட்டத்தில் நிதி ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106