60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – யாழ் மாவட்டத்தில் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எனவும் சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி, சிலர் கொவிட் தடுப்பூசியை நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவானோர் யாழ். மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள் குறித்த அமைச்சு 60 வயதுக்கு மேற்பட்ட கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106