எதிர்வரும் செய்வாய்முதல் 20 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு – யாழ். மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Sunday, September 19th, 2021
யாழ். மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 20 வயது தொடக்கம் 29 வயதினருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ் மாவட்டத்தில் கொரோனாத் தொற்று கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சற்றுத் திருப்தி அடையக் கூடிய வகையில் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே தடுப்பூசி வழங்கும் காலப்பகுதிகளில் ஏற்கனவே 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளைப் பெறாதவர்களும் குறித்த காலப்பகுதியில் தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106