அதி வேகம் – விபத்தில் இளைஞர் பலி!

Sunday, September 19th, 2021

நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நீர்வேலி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டிலக்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அதன் போது , கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106