மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
Saturday, September 18th, 2021
பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலவரையறை இறுதி செய்யப்படாத நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்காது எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்குரிய திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒக்டோபர் வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்காமல் முதலாம் திகதியுடன் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106