மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன – ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசியும் விரைவில் வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிப்பு!
Saturday, September 18th, 2021
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதோவேளை, இலங்கை தனது தடுப்பூசி வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்திருந்தது.
அத்துடன் சினோவெக் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும். ஆகஸ்ட் இறுதி வரை சுமார் 50 நாடுகளில் 1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1.4 பில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106