ஜனாதிபதி தலைமையில் நாளை கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி – ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு!
Thursday, September 16th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் நாளை 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பெரும்பாலும் அதிகளவான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சுகாதார தரப்பினர் மேலும் சில வாரங்களுக்கு குறித்த ஊரடங்கை தொடருமாறு வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106