சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணை!

Thursday, September 16th, 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே உள்ளிட்ட குழுவினர் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியிட்டதையடுத்து லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு  இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்று ஆராய்ந்திருந்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106