அத்தியாவசிய சேவைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு!
Wednesday, September 15th, 2021
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிரதேச அலுவலகங்கள் அத்தியாவசிய சேவை பெறுநர்களுக்காக இன்றுமுதல் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, அத்தியாவசிய சேவைகளை பெறும் தேவையுடைய சேவை பெறுநர்கள் மாத்திரம் தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல முடியும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம் பத்தரமுல்லை தலைமை காரியாலயம் தொடர்ந்தும் ஒரு நாள் சேவை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் பிராந்திய காரியாலயங்கள் காலை 09 மணிமுதல் மதியம் 01 மணிவரை திறந்திருக்கும் எனவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் பெருந்தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் அவ்வப்போது எடுக்கப்படும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களுக்கு ஏற்ப, திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106