ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பதிலுரையில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
Tuesday, September 14th, 2021
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இத்தாலியிலிருந்து தொலைகாணொளி வழியாக கலந்துகொண்டு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. அது தொடர்பக இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப் பராமரிக்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106