மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது – புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவிப்பு!
Tuesday, September 14th, 2021
மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், குறித்த மணலானது குழாய் இணைப்பு மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், க்யுப் ஒன்றுக்கு 180,ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாகவும் புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106