யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் – மாவட்ட செயலகம் தகவல்!
Monday, September 13th, 2021
யாழ்ப்பாணத்தில் தற்போது 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது நேற்றையதினம் மாத்திரம் 76 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர்.
யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 320 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 11 ஆயிரத்து 877 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தற்போது 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் முதலாவது டோஸை 2 இலட்சத்து 98 ஆயிரத்து 509 பேரும் இரண்டாவது டோஸை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 976 பேரும் பெற்றுள்ளனர்.
இந்த காலகட்டத்தை மிக கவனமான பாதுகாப்பான சூழலை கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். அதேவேளை தேவையற்ற ஒன்றுகூடல்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி நாங்கள் மீண்டும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106