இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது – சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக பதிவு!

Sunday, September 12th, 2021

இலங்கையில் கொரோனா தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான நால்வரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 110 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 83 ஆயிரத்து 280ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 802 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 89 ஆயிரத்து 969 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 60 ஆயிரத்து 895 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106