முதல் போட்டியில் இலங்கை தோல்வி!

Saturday, September 11th, 2021

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த தென் ஆபிரிக்க அணி 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 01 பவுண்டரி, 02 சிக்ஸர்கள் அடங்களாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில்,164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில் தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்களாக 66 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 19 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெட்டை கைப்பற்றினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106