தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!
Saturday, September 11th, 2021
கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுவதுடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா செல்கிறார் பிரதமர் ரணில்!
தியாகி பொன். சிவகுமாரன் நினைவுதினம் இன்று!
புதிய வரி விதிப்பு - அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி த...
|
|
|


