அமெரிக்காவிற்கு ஜனாதிபதி விஜயம்!
Monday, August 15th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பரிவாரங்களுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்திற்கான விஜயம் இடம்பெறுவது வழமையாகக் காணப்பட்டது.
Related posts:
ஊரடங்கு காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி - சுகாதார அமைச்சினால் வெளிளிடப்பட்டது வழிகாட...
தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்...
படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
|
|
|


