பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021

நாட்டில் விரைவில் அமுலுக்கு வரும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளதாக இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் கூடிய அமைச்சரவை ஒரு தடவை மட்டும் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் 7 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, விநியோகத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேலும் கூறுகையில் –

குறித்த தடையை அமுல்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக்கோப்பை, கத்தி, இடியப்பத்தட்டு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106