நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Thursday, September 9th, 2021

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த வியத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தற்போது நீரையும், நீர் மூலங்களையும்டு பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பரிட்சார்த்த செயற்திட்டம் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106