யாழ் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – அத்தியாவசிய பொருட்களினதும் விலை உயர்வுகளும் கட்டுப்பாட்டுக்குள் – மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலகம் மேலும் தெரிவிக்கையில் –

அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில் சீனி மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு கடந்த காலத்தில் தட்டுப்பாடு காணப்பட்டது.

எரிவாயு  பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுவிட்டது. மேலும் சீனியினுடைய விலையும் தற்போது குறைவடைந்துள்ளது

அதேநேரம் உணவு ஆணையாளர் திணைக்களம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களங்கள் இணைந்த வகையில் சீனியை பகிர்ந்தளிப்பதற்க்குரிய  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என  கண்காணிப்பதற்கு  ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் விநியோகத்தினை  தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இவ்வாரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலகம் மேலும் குறிப்பிடுகையில் –

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று குறைவடைந்துள்ளது.

யாழில் நேற்று 213 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனாத் தொற்றினால் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இதுவரை 13 ஆயிரத்து 944 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 9 ஆயிரத்து 950 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5 ஆயிரத்து 641 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலும் 30 வயதிற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106