பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான முச்சக்கரவண்டி அலங்காரங்களுக்கு அனுமதி!
Monday, September 6th, 2021
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே நடந்த கலந்துரையாடலின்போதே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கலந்துகொண்டார்.
முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து கலந்துரையாட பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106