வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!

Monday, May 28th, 2018

இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலால் கடந்த இரு தினங்களில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையும் கடந்த 25 ஆம் திகதி இரவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆறு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயது ஆகிய இரு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரை 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகமானவர்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு - நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜய...
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்...
ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து - மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை - முகக்கவச...
டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஜனாதிபதி...
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் - அமைச்சர...