எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது – இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, September 4th, 2021

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜடபக்ச அவ்வாறே இந்தத் பெருந் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டாவுக்கும் (Uhuru Muigai Kenyatta) இடையில், தொலைபேசி ஊடாகச் சுமூகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் – இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பலமாகியுள்ளமை தொடர்பில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

இதனிடையே கொவிட் தொற்றொழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்களின் வெற்றி தொடர்பில், கென்யா ஜனாதிபதி தமது பாராட்டுகளை, ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டின் 70 சதவீதமான மக்களுக்குத் தடுப்பூசி ஏற்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த முறைமையான வேலைத்திட்டமானது, ஏனைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது எனவும், கென்யா ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யக்கிடைத்த போதிலும், இவ்வாண்டின் இடைப்பட்ட காலப்பகுதியில், நாட்டுக்குள் புதிய கொவிட் திரிபுகள் உருவானதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துரைத்தார். வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளதென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச  அவ்வாறே இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியுமென்றுக் கூறினார்.

அத்து;ன் இரு தலைவர்களும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தாம் நெருங்கியத் தொடர்புகளைப் பேணியதாக எடுத்துரைத்த கென்யா ஜனாதிபதி, இரு நாட்டு மக்களின் நலனுக்காக, இலங்கை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணத் தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆபிரிக்காவின் மிக முக்கிய நாடாக விளங்கும் கென்யா, இலங்கையுடன் சிறந்த நட்புறவைப் பேணும் நாடாகும்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகத் தொடர்புகளின் 50 வருடப் பூர்த்தி, 2020இல் முழுமையடைந்ததோடு, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகள், இரு தரப்புக்கும் இடையில் புதிய உயர் நிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106