யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பம்!

Friday, September 3rd, 2021

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில்  இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக  ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து மூன்று பேர் பல்கலைக்கழகத்தின் நிதி மூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனா பி. சி. ஆர். ஆய்வு கூடத்தில் பணியாற்றிவந்த 4 மருத்துவ ஆய்வு கூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதனால், பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடந்த மாத்த்தின் நடுப்பகுதியில் இருந்து மருத்துவ பீடத்தில் பி. சி. ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து உடனடியாக ஒப்பந்த அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆள் ஆளணியை உள்வாங்குவதற்குத் துணைவேந்தர் பணித்திதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் மூலம் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதனால், விரைவில் சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106