வடக்கு – கிழக்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவ மக்களே காரணம் – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை!
Wednesday, September 1st, 2021
வடக்கு – கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் வெளியில் நடமாடாது இருந்தால் மட்டுமே இந்தத் தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஏதேனும் அத்தியாவசிய தேவைகளுக்கு மேட்டுமே வீடுகளிலிருந்து வெளியேறுமாறும் குறிப்பிட்ட அவர், இதன்போது வீதிச்சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றிப்னை கருத்தில் கொள்ளாது போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர் என்றும், இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பல கேள்விகளைக் கேட்கும்போது அற்கான ஒத்துழைப்பைப் அவர்களுக்கு வழங்குமாறும் வடக்கு – கிழக்கு மக்களைக் கோருகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106