கொரோனாவால் தொடர்ந்தும் உயிரிழப்புகள் பதிவு – தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் 4 ஆயிரத்தை கடந்து செல்கிறது!
Monday, August 30th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 192 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது..
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 598 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 59 ஆயிரத்து 796 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு
கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர்...
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரச...
|
|
|


