உங்கள் குடும்பங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் – மன்னார் மாவட்ட வைத்திய தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி கோரிக்கை!
Sunday, August 29th, 2021
மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அந்த மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த வியடங்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
மன்னார் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 560 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் 536 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இறுதியாக மேலும் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாரை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை 2 மரணம் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 18 கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே மன்னார் மாவட்டத்தில் தற்போது 61 ஆயிரம் பேர் முதலாவது தடுப்பூசியையும், 52 ஆயிரம் பேர் இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று சுகாதார குழுவினர் தடுப்பூசியை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுவதோடு, தேவையின்றி நடமாடுபவர்களுக்கு ஆன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் திடீரென மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் சுதாகர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106