தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை!
Thursday, August 26th, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம் காணாமல்போனமை குறித்து, அந்தத் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒளடதங்கள் தொடர்பான பிரதிநிதி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் கீழ் இருந்த குறித்த தரவுத்தளம், சில நாட்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபைத் தலைவரான வைத்தியர் ரசித்த விஜேவன்தவின் ஆலோசனையின் பேரில், குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை - நிதியமைச்சர் ரவி க...
யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!
விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் - 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்க...
|
|
|


