இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!
Wednesday, August 25th, 2021
நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.
நேற்றுவரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில், தாமதமான முடிவுகளில் மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்றுறுதியானதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து, 285 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொவிட் தொற்று பரவலின் ஆரம்பத்திலிருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் 60 ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆளும் கட்சி சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன தெரிவு!
அடுத்த வருடம்முதல் சகல பரீட்சைகளும் உரிய நேரத்தில் நடத்தப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
கொலன்னாவ முனையத்தில் விநியோகம் நிறுத்தம் -எரிபொருள் இன்றி திரும்பிய பவுசர்கள்!
|
|
|


