கொவிட் சவாலை வெற்றிக்கொள்ள பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு வைத்திய உபகரணங்கள் !
Saturday, August 21st, 2021
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.
கொவிட்-19 சவாலை வெற்றிகொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட வைத்திய உபகரணத் தொகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators), 150 C-PAP செயற்கை சுவாசக் கருவிகள் என்பன உள்ளடங்கும்.
பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்த நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106