இலங்கையில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

Saturday, August 21st, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 3 ஆயிரத்து ,835 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 81 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இலங்கை வரலாற்றில், ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை இது என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 810 பேர் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் மேலும் 54 ஆயிரத்து 212 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106