எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை!

Thursday, August 19th, 2021

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை  விரைவாக முடிக்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம, நீதிமன்றத்தில் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட விசேட குழு, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சான்றுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களை ஆராய்ந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை உடனடியாக முடிக்க தீர்மானித்துள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது

000

Related posts:


தீர்க்கதரிசனத்தோடு மக்களுக்காக பணியாற்றிவருபவர் டக்ளஸ் தேவானந்தா - தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தின...
நாட்டில் சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - ஜனாதிபதி!
தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...