யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!
Tuesday, August 17th, 2021
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில் 13 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவது என்றும் அன்டிஜென் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வந்தவர்களுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது என்றும் அதன் பின்னர் தொற்றில்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய பின்னர் சந்தையை மீளத் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று நாடுகளிடமிருந்து மின்வலுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
யாழ் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!
கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான இறுதி நாள் அலங்காரத் திருவிழாவில் கலந்துகொ...
|
|
|


