பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுப்பது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் – வைத்திய நிபுணர் பேரானந்தராஜா எச்சரிக்கை!
Sunday, August 15th, 2021
சிலர் பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள்தான் கட்டாயம் தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள வேண்டுமென பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் கவனமாக இருந்து கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு முன்னின்று உழைக்க வேண்டும்.
இதுவரை 8 ஆயிரம் தொற்றாளர்களும் 176 மரணங்களும் யாழ் மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோயை எதிர்கொள்ள இரண்டு வகையான வழிகள் இருக்கின்றது. ஒன்று நோய் தொற்று வராமல் தடுப்பது ,மற்றையது தொற்று வந்ததன் பின்பு வைத்தியசாலை சிகிச்சை முறை.
அந்தவகையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
சிலர் வெவ்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள் தான் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வாமை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள வைத்தியர்களுடன் பேசினால் அதற்குரிய நடவடிக்கையை அவர்கள் எடுப்பார்கள்.
இதனிடையே மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், மரணச் சடங்குகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் பல பேர் கூடுவதால் ஒருவருடைய உடலில் இருந்து நோய் இன்னொருவருக்கு தாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடலை தவிர்ப்பது சிறப்பானது எனவும் அவர் வலியுறுது;தியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106